Friday, July 27, 2018


மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம்' சபரிமலை வழக்கில் எச்சரிக்கை 


dinamalar 27.07.2018

புதுடில்லி:''காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைக்கு எதிராக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதித்தால், மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது,'' என, க் ஷேத்ர சம்ரக் ஷண சமிதி, உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துஉள்ளது.



கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.

நீண்ட காலமாக, தேவஸ்தானம் கடைபிடித்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரியும்,


இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கியஅமர்வு விசாரித்து வருகிறது.

வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, க் ஷேத்ர சம்ரக் ஷண சமிதி சார்பில், வழக் கறிஞர் கைலாசநாத பிள்ளை வாதிட்டதாவது:சபரிமலை அய்யப்பன் கோவிலில், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது கிடையாது என்ற நடைமுறை, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையில் குறுக்கீடு ஏதும் ஏற்பட்டால், அது, இன்னும் ஒரு அயோத்தி சம்பவத்திற்கு வழி வகுக்கும். இதனால், கேரளாவில் அமைதி சீர்குலையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ''அய்யப்பன் கோவில் பொது மக்களுக்கானது என்றால், அதில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அரசியல்

அமைப்பு சட்டத்தின் படி, அனைத்து நடை முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,'என்றார்.

அதற்கு பதில் அளித்த, 'பியூபில் ஆப் தர்மா' அமைப்பின் சார்பில் வாதிட்ட, வழக்கறிஞர் சாய் தீபக், ''அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். ''தற்போது, அதில் குறுக்கிடுவது, அவர்களின் உரிமையில் தலையிடுவது போன்றதாகும்,' என்றார்.

மேலும், ''பெண்களுக்கு மாத விலக்கு ஏற்படுவதை, அசுத்தம் என நாங் கள் கூறவில்லை. அசாம் மாநிலம் காமக்யா கோவிலில், முக்கிய வழிபாடு நடப்பதே, பெண் தெய்வத்திற்கு தான்,'' என்றார்.இத்துடன், நேற்றைய விசாரணை நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024