Monday, June 3, 2019

மருத்துவக் கல்லூரிகளில் 400 பணியிடங்களை நீக்க முயற்சி: அரசு மருத்துவர்கள் புகார்

By DIN | Published on : 03rd June 2019 02:55 AM |

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் 900 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அதற்கு அரசு மருத்துவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

காலியிடங்களை அறிவிக்காமலேயே கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும், ஏறத்தாழ 400 பணியிடங்களை நீக்குவதற்கான முயற்சி இது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், முதுநிலை நிலைய மருத்துவர்கள் என 830 பேருக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 30-ஆம் தேதி முதல் இந்தக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர், செயலர், மருத்துவக் கல்வி இயக்குநரை அரசு மருத்துவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகள் நிறைவு செய்த மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக பட்ட மேற்படிப்பு முடித்தவர்களை பணியமர்த்த தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. தற்போது பணியிட மாற்றம் என்ற பெயரில் அவர்களை அங்கிருந்து நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் 400 பணியிடங்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது எத்தனை காலிப் பணியிடங்களுக்காக கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்றே அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், 830 பேரை தேவையில்லாமல் கலந்தாய்வுக்கு அழைப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024