Monday, June 3, 2019

பழைய பஸ் பாஸ் போதும் மாணவர்களுக்கு அறிவிப்பு

Added : ஜூன் 03, 2019 00:30

கோவை : பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் ஜூலை, 31ம் தேதி வரை அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என, அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர். மாணவர்களிடம் இருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறும் பள்ளிகள், ஜூன், ஜூலை மாதங்களில், அரசு போக்குவரத்துக்கழகத்திடம் சமர்ப்பித்து, பஸ் பாஸ் பெற்று தருகின்றன.இந்நிலையில், போக்குவரத்து செலவை தவிர்க்கும் விதமாக மாணவர்கள், பழைய பஸ் பாஸ் கொண்டு ஜூலை, 31ம் தேதி வரை அரசு பஸ்களில் பயணிக்கலாம். பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள், பள்ளி சீருடையில் இருந்தால் போதுமானது என, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024