Monday, June 3, 2019

'வாட்ஸ்ஆப் குரூப்' ஆரம்பித்து குச்சி கேட்ச்சிங்!.கெத்து காட்டுறாங்க நம்ம யூத்து!

Added : ஜூன் 03, 2019 01:10

கோவை:இரவு 11:00 மணி... இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல் எதிரே வேகமாக வந்த ஒரு வாலிபர், 'குச்சி கேட்ச்சிங்' என்ற ஒரு சொல்லை கத்தி விட்டு பறந்தார்...!ஒன்றும் புரியாமல், சிறிது துாரம் சென்று பார்த்த போது, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சோதனையில் இருந்து நம்மை காக்க, பறந்த வாலிபர் உதிர்த்து விட்டுப் போன அந்த வார்த்தைகளின் அர்த்தம், 'போலீசார் வாகன சோதனை செய்கின்றனர்; கவனமா போ' என்பதுதான்.கோவை மாநகரில், நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகன அடர்த்தி காரணமாக போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் தினசரி நிகழ்வாகி விட்டன.
போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து, முற்றிலும் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.பைக்கில் எடுத்தாலே 'பறக்கும்' நம்மூர் இளைஞர்களுக்கு இது பிடிக்குமா...? கையில் உள்ள மொபைல் போனை வைத்து, என்னென்னவோ செய்யும் அவர்கள், போலீசாரிடம் இருந்து தப்பவும், அதே போனில் 'வாட்ஸ் ஆப்' குழுவே உருவாக்கி, உலா விட்டுள்ளனர். 

அந்த குழுவின் பெயர்தான், 'குச்சி கேட்ச்சிங்!'இந்த பிரத்யேக 'குரூப்'பில், பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள்தான் உள்ளனர். இவர்கள் தாங்கள் பயணிக்கும் பகுதியில், எங்காவது போலீசார் வாகன சோதனை, ஹெல்மெட், அதிவேகம் போன்ற சோதனை நடத்துவதை பார்த்தால், உடனடியாக குறிப்பிட்ட குரூப்பில் 'அப்டேட்' செய்கின்றனர். 

போலீஸ் சோதனை நடக்குமிடத்தை பதிவு செய்கின்றனர். இது போதாதா! இளைஞர்கள் உஷார் ஆகி, அந்த பாதையை தவிர்த்து விடுகின்றனர்.
அதோடு விடுகிறார்களா... அதே குரூப்பில் உள்ள பிறருக்கு மட்டுமில்லாமல், தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், இந்த 'பயனுள்ள' தகவலை 'பார்வேர்டு' செய்கின்றனர். இந்த 'நெட்வொர்க்' மூலம் மேலும் பல, புது 'வாட்ஸ்அப்' குரூப்கள் உருவாகி வருகின்றன.இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார், 'என்னய்யா...இப்படியெல்லாமா வாட்ஸ் ஆப்பை யூஸ் பண்ணுவாங்க... இதுக்கு பதிலா சட்டத்தை மதிச்சு நடந்துக்கிட்டா, உயிரையாவது பத்திரமா வச்சுக்கலாமே' என்று கூறி ஆதங்கப்படுகின்றனர்

.பெற்றோருக்கு நீங்கதான் சொத்து! ெஹல்மெட் அணியாமல் பயணிப்பதை ஒரு 'கெத்து' ஆகவும், அந்த கெத்தை ஒரு பெரிய சொத்து ஆகவும் கருதி, பைக்கை முறுக்குகின்றனர் நம் இளைஞர்கள். பைக்கில் 'ரியர்வியூ மிர்ரர்' பொருத்துவதையும், பெரிய அவமானமாக நினைக்கின்றனர்

 - ஒருமுறை விழுந்து எழுவது வரை!

சட்டத்தை மதித்து பத்திரமாக பயணிப்பதுதான், உண்மையான கெத்து என்பதையும், வீட்டில் காத்திருக்கும் பெற்றோருக்கு, நீங்கள்தான் உண்மையான சொத்து என்பதையும்...இளைஞர்களே இனியாவது உணருங்கள்.ஏனென்றால், வாழ்க்கையில் நீங்கள் பயணிக்க வேண்டிய துாரம், இன்னும் நிறைய இருக்கிறது!இந்த பிரத்யேக 'குரூப்'பில், பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள்தான் உள்ளனர். இவர்கள் தாங்கள் பயணிக்கும் பகுதியில், எங்காவது போலீசார் வாகன சோதனை, ஹெல்மெட், அதிவேகம் போன்ற சோதனை நடத்துவதை பார்த்தால், உடனடியாக குறிப்பிட்ட குரூப்பில் 'அப்டேட்' செய்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024