Friday, December 13, 2019


மறக்க முடியுமா...

Added : டிச 12, 2019 21:29




படம்: அந்த நாள்வெளியான ஆண்டு: 1954நடிகர்கள்: சிவாஜிகணேசன், பண்டரிபாய் இயக்கம்: வீணை எஸ்.பாலசந்தர்கடந்த, 1950களில், 20க்கும் மேற்பட்ட பாடல்களுடன் வெளிவந்த படங்களுக்கு மத்தியில், பாடல்கள், சண்டை காட்சிகள் இல்லாமல் வெளிவந்த கிரைம் படம் தான், அந்த நாள்.உலக புகழ் பெற்ற, ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவா இயக்கிய, ராஷோமன் படத்தின் தழுவல். இரண்டாவது உலகப்போர் நிகழும் காலத்தில், சென்னையில் இருக்கும், 'ரேடியோ இன்ஜினியர்' சிவாஜிகணேசன், முதல் காட்சியிலேயே, துப்பாக்கியால் சுடப்பட்டு, இறந்து போகிறார்.வழக்கை துப்பறியும் அதிகாரியாக, ஜாவர் சீதாராமன், சிவாஜியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு, சிவாஜியின் மனைவி, உறவினர், அக்கம்பக்கத்தினர் என, அனைவரிடமும், ஜாவர் சீதாராமன் விசாரிக்கிறார்.விசாரிக்கப்படும் நபர்கள், அவர்களின் பார்வையில், சம்பவத்தன்று நடந்ததை சொல்கின்றனர் என்பது தான், திரைக்கதையை வேகமெடுக்க செய்கிறது. கொலையை யார் செய்தது, ஏன் செய்தார் என்பதோடு படம் நிறைவு பெறுகிறது.இதே பாணியில், ராம், விருமாண்டி போன்ற படங்கள் வந்துள்ளன. இப்படியும் தமிழில் படங்கள் வந்துள்ளனவா என, ஆச்சரியமூட்டும், அந்த நாள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024