சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி, 15 முதல் நடக்கிறது
Added : டிச 18, 2019 02:04
சென்னை, :மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று அறிவித்தார். அதன்படி, பிப்., 15ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. பிப்., 26 வரை, தொழிற்கல்வி மற்றும் விருப்ப பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி, 27ல் துவங்குகின்றன. பிப்., 27ல் ஆங்கில மொழி தாள் தேர்வு நடத்தப்படுகிறது. பின், படிப்படியாக முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 30ல் தேர்வுகள் முடிகின்றன. தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, மூன்று மணி நேரம் நடக்க உள்ளன.
10ம் வகுப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்., 15ல் துவங்க உள்ளது. பிப்., 20 வரை விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. அதன்பின், பிப்., 22ல் மொழி பாட தேர்வுகள் துவங்க உள்ளன.
முக்கிய பாடங்களுக்கான தேர்வு, மார்ச், 4 முதல் நடத்தப்படுகிறது; மார்ச், 20ல் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இந்த தேர்வுகள், காலை, 10:30 முதல் பகல், 1:30 மணி வரை நடத்தப்பட உள்ளன.
No comments:
Post a Comment