Wednesday, July 1, 2015

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது முதல் கட்டமாக எச்சரிக்கை அடுத்த கட்டமாக நடவடிக்கை



சென்னை,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது இன்று (ஜூலை 1–ந் தேதி) முதல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் சென்னை நகரை பொறுத்தமட்டில் இன்று முதல் சில நாட்கள் முதல் கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது என்றும், அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று இரவு தகவல்கள் வெளியானது.

அந்த தகவல்களை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஹெல்மெட் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக வந்த தகவல்களையொட்டி ஹெல்மெட் வாங்குவதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து, அதன் பிறகு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024