Sunday, November 19, 2017

அடையாள அட்டை கட்டாயம் பதிவு துறையினருக்கு உத்தரவு

Added : நவ 19, 2017 03:14 |

'பத்திரப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், புகைப்பட அடையாள அட்டையை, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்' என, பதிவுத் துறை, ஐ.ஜி., குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில், பத்திரப்பதிவு பணியை, 'ஆன் - லைன்' முறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்களை பயன்படுத்தக் கூடாது என்பது உட்பட, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அத்துடன், சம்பந்தம் இல்லாத நபர்கள், தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க, பணியாளர்களுக்கு, நிர்வாகரீதியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இதன்படி, 'அலுவலக நேரத்தில் பதிவு பணியில் இருப்பவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்' என, பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை, அனைத்து, டி.ஐ. ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024