Saturday, November 4, 2017

தேசிய செய்திகள்

வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதியை தெரியப்படுத்துங்கள்



வங்கி கணக்கு மற்றும் மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்யூ ஸ்டீபன் என்பவர் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நவம்பர் 04, 2017, 04:54 AM

புதுடெல்லி,

வங்கி கணக்கு மற்றும் மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்யூ ஸ்டீபன் என்பவர் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இம்மாத இறுதியில் வேறு ஒரு அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று கூறினர்.

இருப்பினும், வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 என்று வங்கிகளும், மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 6 என்று மொபைல் சேவை நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பச் சொல்லுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024