உணவுக்குழாயில் சிக்கிய தாயின் மெட்டி: நான்கு மாதங்கள் போராடிய ஒரு வயதுக் குழந்தை!
By DIN |
Published on : 24th November 2017 06:34 PM
டேராடூன்: எதிர்பாராமல்
விழுங்கி விட்ட தாயின் மெட்டி ஒரு வயதுக் குழந்தையின் உணவுக்குழாயில்
சிக்கிய நிலையில், காரணம் தெரியாமல் நான்கு மாதங்கள் போராடி பின்னர்
ஆபரேஷன் செய்து அகற்றிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த
ஒரு தம்பதியினரின் ஒரு வயதுக் குழந்தை பிரேம்குமார். கடந்த ஒரு மாததிற்கு
முன்னரில் இருந்து, இந்தக் குழந்தை தொண்டையிலிருந்து வினோதமான சப்தங்களை
எழுப்புவதும், உணவு அருந்தும் போது மிகவும் சிரமப்படுவதுமாக இருந்துள்ளது.
குழந்தையின் பெற்றோர் காரணம் தெரியாமல்
ஒரு மாதமாக பல்வேறு மருத்துவர்களிடம் சென்று காண்பித்துள்ளனர். பல
சோதனைகளையும் செய்துள்ளார். ஆனால் யாராலும் சரியான தீர்வினைக் கொடுக்க
இயலவில்லை.
பின்னர் இறுதியாக பெரிய தனியார்
மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற சோதனையின் பொழுதுதான் குழந்தையின் தொண்டையில்
வெள்ளிப் பொருள் ஒன்று சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது.சோதனைகளின்
முடிவில் அது ஒரு மெட்டி என்பது தெரிய வந்தது. பின்னர் கடந்த 18-ஆம் தேதி
அந்த மருத்துவமனையில் நடந்த சிக்கலான ஒரு ஆபரேஷன் மூலம் அந்த மெட்டியானது
குழந்தை தொண்டையில் இருந்து நீக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த மருத்துவமையின் தலைமை மருத்துவர் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இப்படி ஒரு பொருள் தொண்டையில் சிக்கிக்
கொண்ட பின்னர் மூச்சுத் திணறலோ, நோய்த் தொற்றோ ஏற்படாமல் அந்த குழந்தை
உயிர் பிழைத்திருந்ததுஆச்சர்யம்தான். உணவுக் குழாயின் ஆரம்ப பகுதியில் அந்த
மெட்டி சிக்கிக் கொண்டாலும், அதன் வடிவம் காரணமாக குழந்தைக்கு உணவு உள்ளே
செல்வதில் பிரச்னை ஏற்படவில்லை.இனிமேலும் தாமதம் ஏற்பட்டிருந்தால்
குழந்தையின் உணவுக் குழல் அழிந்து, நெஞ்சில் நோய்த் தோற்று உண்டாகி குழந்தை
இருந்திருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment