Friday, January 19, 2018

ரேஷன் கடை விற்பனை பிரதிநிதி வேலைக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பம்: 117 பணியிடங்களுக்கு 18,200 பேர் போட்டி

Published : 18 Jan 2018 11:10 IST

சிறப்புச் செய்தியாளர் நெல்லை



சான்றிதழ் சரிபார்ப்புக்காக காத்திருப்பு

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டறவு சங்கம் ரேஷன் கடை விற்பனை பிரதிநிதிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நேர்காணலை நடத்தி வருகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் 117. ஆனால், இந்த 117 பணியிடத்துக்கு 18,200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் பலர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். இவர்களைத் தவிர எம்.பில் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை பட்டதாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பணியில் சேர அடிப்படைத் தகுதி என்னவோ பிளஸ் 2 தேர்வில் வெற்றி என்பது மட்டுமே. ஆனால், இந்த அளவுக்கு பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பித்தது அதிகாரிகளை அதிச்சியில் ஆழ்த்தியது.

இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.5000 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் ஊதியம் மாற்றியமைக்கப்படும்.

விண்ணபித்த 18,200 பேரில் 15,000 பேர் நேர்காணலுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்கள் இந்தப் பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 1500 பேருக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இந்தப் பணியில் 220 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொறியியல் பட்டதாரிகள் சிலர் வேலை இல்லாமல் இருப்பதற்கு பதிலாக கிடைக்கும் வேலையைச் செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. பிளஸ் 2 மட்டுமே படித்தவர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தரக்குறைவாகவும் நினைக்கவில்லை என்றனர்.

இன்னும் சிலர் விஏஓ தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பதாகவும், அத்தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைக்கும் வரை இந்தப் பணியை செய்வோம் என்றனர்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...