Friday, January 19, 2018

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு!- நாளை முதல் அமலுக்கு வருகிறது 

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை (20-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
உயர்த்தப்பட்ட கட்டண விவரம்:-
பஸ்
மாற்றியமைக்கப்பட்ட புறநகர் மற்றும் மாநகரப் பேருந்துக் கட்டண விவரம்:-
பஸ்
மாநகர வால்வோ பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயருகிறது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டண உயர்வை அறிவித்தன. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இப்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் குறைவு தான் என்று தமிழக அரசு கூறியுள்ளது. புதிய பேருந்துகள் வாங்குதல், எரிபொருள் செலவு, பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024