Saturday, January 20, 2018

அரசு வழங்கும் ஸ்கூட்டி வேண்டுமா? 12 ஆவணங்கள் முக்கியம் 

JAYAVEL B

பெண்கள், தாம் பணிபுரியும் பணியிடங்களுக்குச் செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு, 2017-2018 நிதி ஆண்டிலிருந்து இருசக்கர வாகனம் வாங்க நிதிஉதவி அளிக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரகப் பகுதியில் 1539 மகளிர்க்கும், நகர்புற பகுதியில் 1810 மகளிர்க்கும் என மொத்தம் 3,349 பெண்கள் பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது 25,000 இவற்றில் எது குறைவோ, அத்தொகையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை, காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகம்மூலம் மானியமாக வழங்கப்படும்.



மகளிர் வாழ்வாதாரத்துக்காக இந்த வாகனங்கள் வழங்கப்படுவதால், 5ஆண்டுகளுக்கு இந்த வாகனங்களை விற்கவோ, வோறொருவருக்கு மாற்றவோ முடியாது. பயனாளிகள், தங்களது சொந்த நிதி அல்லது வங்கிக்கடன், ரிசர்வ் வங்கி விதிகளின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள் மூலமாகக் கடன்பெற்று இருசக்கர வாகனம் வாங்கலாம். கியர் இல்லாத, 125 சிசி-க்கும் மிகாமல் அந்த வாகனம் இருக்க வேண்டும். மானியம் பெறும் நபர், உரிய ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும், 1.01.2018-க்கு பிறகு வாகனம் வாங்கி உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இத்திட்டத்தின்மூலம் பயன்பெறும் மகளிர், பதிவு செய்யப்பட்ட அரசு மற்றும் பொதுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவர்கள், தனியார் தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பல்வேறு அரசுத் திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், சுயமாகத் தொழில் செய்திடும் களவிளர்கள், சமுதாய அமைப்புகளாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர், இத்திட்டத்தின்மூலம் பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகங்களில் இலவசமாகக் கிடைக்கும்.

  விண்ணப்பங்களை சமர்பிக்கும்போது, பிறப்புச் சான்றிதழ் (18-40 வயது வரை), இருப்பிடச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வருமான சான்றிதழ் (வேலைபார்க்கும் நிறுவனம், சுய சான்று), பணிபுரியும் நிறுவனத்தின் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, கல்வித்தகுதிச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, சாதிச் சான்று (ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் மட்டும்), மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வாகனத்திற்கான கேட்பு விலைப் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 22.01.2018 முதல் 5.02.18 வரை நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ அனுப்பலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...