Saturday, January 13, 2018

ரேஷனில் பொங்கல் பரிசு : 17 லட்சம் பேர் வாங்கவில்லை

Added : ஜன 13, 2018 00:39

தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1.84 கோடி பேருக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பை அறிவித்தது.
இவை, ரேஷன் கடைகள் வாயிலாக, 6ம் தேதியில் இருந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று மதியம் வரை, 1.67 கோடி பேர், பொங்கல் பரிசை வாங்கி சென்றுள்ளனர்.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர், நேற்று கூறியதாவது: தகுதியுள்ள அனைத்து கார்டுதாரர்களின், பொங்கல் பரிசும், அவரவர் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகள், நாளையும் வழக்கம்போல் செயல்படும். கடையில் இட நெருக்கடி இருப்பதால், பொருட்களை பாதுகாக்க, ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களின் சிரமத்தை களைய, பொங்கல் பரிசு வாங்காதவர்கள், நாளை கடைக்கு சென்று, பொருட்களை பெறலாம். அப்படியும் வாங்காதவர்கள், 16ம் தேதி முதல் 20 வரை கடைக்கு வந்து, பொங்கல் பரிசு கேட்டால் தரவும் என, கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்பின், யாருக்கும் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024