Saturday, January 13, 2018

சேலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து போக்குவரத்து தொடங்கியது




சேலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து வெளியூருக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. போராட்டம் முடிந்து முழுமையாக பஸ்கள் இயங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

ஜனவரி 13, 2018, 04:31 AM

சேலம்,

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

மீதமுள்ள பஸ்களை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. 22 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையொட்டி, நேற்று அதிகாலை முதலே அரசு பஸ்கள் வழக்கம்போல இயங்க தொடங்கின. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற முக்கிய நகரங்களுக்கான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயங்க தொடங்கியதையொட்டி காலை முதலே சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து பஸ் நிலையம் வந்த பயணிகள் கூறுகையில்,‘‘போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சொந்த ஊருக்கு சென்று பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதோ? என்ற சந்தேகம் இருந்தது. ஒருவழியாக அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததால், பஸ்களும் வழக்கம்போல இயக்கப்படுகிறது. இதனால், சொந்த ஊருக்கு சென்று வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதில் நிம்மதியாக உள்ளோம்‘‘ என்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் மாநகரில் சேலம் ஜவகர் மில் திடல், சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அவை நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

தற்காலிக பஸ் நிலையமான சேலம் போஸ் மைதானத்தில் இருந்து அரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, கடலூர், சிதம்பரம், தம்மம்பட்டி, துறையூர், பேளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஜவகர் மில் திடலில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி ஆகிய வழித்தடங்களுக்கான இயக்கப்பட்டன.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, எடப்பாடி, ராசிபுரம், ஏற்காடு, நாமக்கல், மேட்டூர், மைசூரு, பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பொதுமக்கள் பஸ்கள் எந்தெந்த வழித்தடத்தில் இருந்து செல்கிறது என்பதை அறியும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைந்துள்ள சேலம் போஸ் மைதானம், ஜவகர்மில் திடல் ஆகிய இடங்களுக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு டவுன் பஸ்கள் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...