Monday, January 8, 2018

படித்த கல்லூரிக்கே, 'டீன்' : நெல்லை டாக்டர் பெருமிதம்

Added : ஜன 08, 2018 02:05 |




  திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்த மாணவர், அதே கல்லுாரியில், நேற்று டீனாக பொறுப்பேற்று கொண்டார். நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை டீனாக இருந்த டாக்டர் கண்ணன், நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், நேற்று நெல்லையில் பொறுப்பேற்றார்.
அவர் கூறியதாவது: நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியில் தான், மருத்துவம் படித்தேன். ஆரம்ப சுகாதார நிலையம், தென்காசி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினேன்.
பட்ட மேற்படிப்பு படித்து, சிறுநீரக துறை தலைவராக, நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தேன். இங்கு, துணை முதல்வராகவும் பணியாற்றி உள்ளேன். தற்போது, டீனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியில், ஆரம்பத்தில், 75, 150 என, இருந்த மருத்துவ படிப்பு இடங்கள் தற்போது, 250 ஆக உயர்ந்துள்ளன. பல்வேறு சிறப்பு துறைகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024