Wednesday, January 10, 2018

ஊதிய உயர்வுப்படி ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையில் எவ்வளவு கிடைக்கும்?

ஊதிய உயர்வுப்படி அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எவ்வளவு கையில் கிடைக்கும் என்ற விவரத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு ஊழியர்களுக்கு 10-ஆண்டுக்கு ஒரு முறையும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. எனினும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தையே போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் மாற்றியமைத்து வழங்கப்படுகிறது.


அதன்படி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 2016-இல் மாற்றியமைக்கப்படும் இந்த ஊதியம் (1.055-இல் 2.44 மடங்கு) என்ற அளவில் 257.42 சதவீதமும், 2.5742 மடங்கும் உயர்த்தப்படுகிறது. அதாவது 01.01.2016-இல் பணி நிரந்தரம் பெற்ற அரசு ஓட்டுநரின் ஊதியம் 01.10.2017 அன்று ரூ.33,930 ஆகவும், போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஊதியம் ரூ.34,077 ஆகவும் இருக்கும். 


இது 01.01.2006-இல் அரசு ஊழியர்களுக்கு 100 சதவீதமும், ஒரு மடங்காகவும் ஊதியம் இருந்தது. 01.01.2016-இல் ஊதியத்துடன் இணைக்கப்பட்ட அகவிலைப்படியுடன் 125 சதவீதமும், 1.25 மடங்குடன், ஊதிய உயர்வு 32 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 0.32 மடங்காக அதிகரித்து வழங்கப்பட்டது. இது மொத்தக் கூட்டுத் தொகையில் 257 சதவீதமும், 2.57 மடங்கும் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt

No comments:

Post a Comment

Man submits fake NEET cert at AIIMS, held

Man submits fake NEET cert at AIIMS, held  TIMES OF INDIA 28.10.2024  Ramanathapuram : Ramanathapuram district police have arrested a 22-yea...