Wednesday, January 10, 2018

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க: குடியரசுத் தலைவருக்கு மனு அளித்த முதிய 
தம்பதி


 

மும்பை: இனி நாங்கள் வாழ்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று குடியரசு தலைவருக்கு ஒரு முதிய தம்பதி மனு அளித்துள்ள விவகாரம் அதிர்ச்சியினைக் கிளப்பியுள்ளது.

தெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வருபவர்கள் நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவியான ஐராவதி (வயது 78). லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு லவாடே தம்பதியினர் 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. ஆனால் எங்களுக்கு சில கடுமையான வியாதி வரும் வரை உயிருடன் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியானது அல்ல என்று நினைக்கிறோம்.

எங்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. எங்களது சகோதர சகோதரிகளும் இறந்து விட்டனர்.

நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ எந்தவித பயனும் இன்றி இருக்கிறோம். எங்களது விருப்பத்திற்கு எதிராக நாங்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்பது நாட்டின் பற்றாக்குறையாக உள்ள வளத்தினை வீணடிக்கும் செயல் ஆகும்.

எங்களது மரணத்திற்கு பின்னர் எங்களது உடல்களை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பே முன்வந்து விட்டோம். எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான செல்வத்தினையும் மாநில கருவூலத்திற்கு அளிக்க முன்வந்துள்ளோம்.

இவ்வாறு லவாடே தம்பதியினர் தெரிவித்துள்ளார்கள்.


Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024