Friday, January 26, 2018

பவர்பேங்கால் வந்த பிரச்னை: தில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி!

By Raghavendran | Published on : 25th January 2018 06:49 PM



ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சார்ஜ் செய்து இயங்கும் மின்னணு சாதனங்களின் இயக்கத்துக்காக பவர்பேங்க் உபயோகிக்கப்படுகிறது. இதில் ஒருமுறை சார்ஜ் செய்து கொண்டால் நாம் பயன்படுத்தும் உபகரணங்களில் சார்ஜ் தீரும் போது இதைக் கொண்டு மீ்ண்டும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்நிலையில், இந்த பவர்பேங்கின் விநோத வடிவம் காரணமாக தில்லி விமான நிலையத்தில் சற்று நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும் இதை வைத்திருந்த சம்பந்தப்பட்ட பயணி ஒருவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தில்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் அந்த பயணியிடம் சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவரிடம் கையெறி வெடிகுண்டு இருப்பது தெரிந்தது. இதனால் அங்கிருந்த சக பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் பீதியடைந்தனர். பின்னர் அதனை சோதித்து போது, அது சார்ஜ் செய்ய பயன்படும் பவர்பேங்க் என்பது தெரியவந்தது.

இதையடுத்து எச்சரிக்கப்பட்ட அப்பயணி சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பொதுவாக இதுபோன்ற மின்னணு சாதனங்கள் பல்வேறு வகையான வேடிக்கையான வடிவங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியின் விமானநிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.நம் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி நாம் பொருட்களை வாங்கினாலும், சற்று பொதுநலனை கருத்தில் கொண்டு அதனால் பிறர் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் செயல்படுவதே சிறந்தது.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...