Wednesday, January 10, 2018

ஆதார் இல்லையென்றால் அந்த நபரே இல்லையென்றாகி விடுமா?: அரசுக்கு உச்ச நீதிமன்றம் காரசாரக் கேள்வி

Published : 10 Jan 2018 18:39 IST

புதுடெல்லி



புதுடெல்லி: ரைன் பசேரா வீடற்றோர் இரவுக்காப்பகத்தில் உறங்குபவர்கள். கடந்த சில தினங்களில் நகரின் கடும் குளிருக்கு சுமார் 44 பேர் பலியானதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம். | பிடிஐ.

ஆதார் அடையாளம் இல்லையென்றால் அரசைப் பொருத்தவரை அந்த நபரே இல்லை. அப்படித்தானே? என்று ஆதார் தொடர்பற்ற இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது.

வீடற்றோர், கடும் குளிரில் சாலை நடைமேடைகளிலும், தெருக்களிலும் படுத்துறங்குவோருக்கு ஆதார் இல்லையெனில் அரசைப் பொருத்தவரை அவர்கள் இல்லவே இல்லை என்றாகி விடுமா என்று வீடற்றோருக்கான இரவு தங்கும் விடுதி தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவர், இரவு தங்குமிடங்களில் ‘ஆதார் அல்லது ஏதாவது அடையாள அட்டை காண்பித்தால் அனுமதிக்கலாம்’ என்று கூறினார்.

இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “வீடற்ற மனிதர்கள் எப்படி ஆதார் பெற முடியும்? அவர் ஆதார் பெறவில்லையெனில் அரசின் கண்களில் அப்படிப்பட்ட நபர் ஒருவர் இல்லை அப்படித்தானே?” என்று எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

இதற்கு வழக்கறிஞர், “வாக்காளர் அட்டை உள்ளிட்ட பிற அடையாள அட்டைகள் உள்ளனவே” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த கோர்ட், “வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமெனில் முகவரி நிரூபணம் தேவை, வீடற்றோருக்கு ஏது முகவரி” என்று மீண்டும் நீதிபதிகள் மடக்கினர்.

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “90 கோடி மக்கள் ஆதார் வைத்துள்ளனர், இவர்கள் அரசு கூறியதன் படி வங்கிக்கணக்குகளில் இணைக்க வேண்டும், நலத்திட்டங்களைப் பெற வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...