Tuesday, May 22, 2018

கழிப்பறை வசதி இல்லாத ரயில் : பயணியர் கடும் அவஸ்தை

Added : மே 22, 2018 01:19

கரூர்: திருச்சியிலிருந்து, சேலம் வரை இயக்கப்படும், பயணியர் ரயிலில் கழிப்பறை வசதி இல்லை. இதனால், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.திருச்சியில் இருந்து, கரூர் வரை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பயணியர் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில், பிப்., முதல், சேலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஸ்சை விட, கட்டணம் குறைவு என்பதால், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இதனால், சோதனை முறையில் இயக்கப்பட்ட இந்த ரயில், ஆக., 4 வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.திருச்சியிலிருந்து தினமும் காலை, 9:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம், 1:20க்கு சேலம் செல்கிறது. அங்கு, 1:30க்கு புறப்பட்டு, மாலை, 5:30 மணிக்கு, திருச்சி சென்றடைகிறது. நான்கு மணி நேரம் செல்லும் இந்த ரயிலில் கழிப்பறை வசதி இல்லை.

இது குறித்து, பயணியர் கூறியதாவது:திருச்சியிலிருந்து, கரூர் வரை இயங்கிய போது, ரயிலில் கழிப்பறை வசதி இருந்தது. 100 கி.மீ.,க்கு குறைவாக உள்ள பகுதிகளுக்கு, கழிப்பறை வசதி இல்லாத ரயில் இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி, பழைய ரயில் நிறுத்தப்பட்டு, கழிப்பறை வசதி இல்லாத ரயில் இயக்கப்பட்டது. பின், சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. சேலம் - திருச்சி துாரம், 156 கி.மீ., ஆகும். எனவே, நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில், மீண்டும் கழிப்பறை வசதி உள்ள ரயிலையே விட்டிருக்க வேண்டும்.ஆனால், கழிப்பறை வசதி இல்லாத ரயிலே தொடர்ந்து செல்கிறது. இதனால், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள் முதலான பயணியர் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருச்சி - மன்னார்குடி மற்றும் கடலுார், மானாமதுரை பகுதிகளில், கழிப்பறை வசதி கொண்ட, 'டெமோ' ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், திருச்சி - சேலம் வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...