Tuesday, May 1, 2018

'மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..! 

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

Gobichettipalayam:

“பள்ளிப் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றினை நட்டுப் பேணிக்காத்து வளர்க்க வேண்டும். அதனடிப்படையில், மாணவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்” என கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளபாளையத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் எம்.பி சத்தியபாமா, அந்தியூர் எம்.எல்.ஏ இ.எம்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், “இயற்கை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழாக்களை நடத்தி வருகிறோம். அதன்படி பள்ளிப் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றினை நட்டுப் பேணிக்காத்து வளர்க்க வேண்டும். பள்ளியின் இந்த ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மிக விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 9 கல்லூரிகளில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 3,145 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளுக்கு இணையதள வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024