Sunday, July 22, 2018

புதிய 100 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வருமா?- ஏடிஎம்களை சீரமைக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?

Published : 21 Jul 2018 14:01 IST


பிடிஐ   புதுடெல்லி,




ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய ரூ.100 நோட்டு : கோப்புப்படம்

இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருமா என்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய ரூ.100 கோடி தேவைப்படும் என்பதால், ஏடிஎம் சேவை நிறுவனங்கள் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றன.

ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் பழை 100 ரூபாய் நோட்டுகளைக் காட்டிலும், புதிதாக லேவண்டர் நிறத்தில் வெளியாக உள்ள 100 ரூபாய் நோட்டு அளவில் சிறியதாகும்.ஆதலால், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காகத் தனியாக ஒரு அடுக்கை ஏடிஎம் எந்திரங்களில் உருவாக்க வேண்டும். நாடுமுழுவதும் ஏறக்குறைய 2.40 லட்சம் ஏடிஎம் எந்திரங்கள் செயல்பாட்டில் இருப்பதால், எளிதாக ரூ.100 நோட்டுகளை ஏடிஎம் எந்திரத்தில் கொண்டுவந்து விட முடியாது.

புதிய 100 ரூபாய் நோட்டுகள் 66மிமீ அகலமும், 142 மிமீ நீளமும் கொண்டது. அதேசமயம், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.100 நோட்டுகள் அளவு 73மிமிX 157மிமீ நீளத்தில் இருக்கிறது. பழைய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் எந்திரத்தில் வைக்கும் இடத்தில் புதிய 100 ரூபாய்களை வைக்க முடியாது. அதன்நீளம், அகலம் வேறுபடும் என்பதால், எந்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆனால், பழைய 100 ரூபாய்களும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருப்பதால், எடிஎம் இயந்திரத்தில் புதிய 100 ரூபாய் வைப்பதற்காகத் தனியாக ஒரு அடுக்கு உருவாக்க வேண்டியது. அவசியமாகும். இதற்காக நாடுமுழுவதும் 2.40 லட்சம் ஏடிஎம்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில், ஏடிஎம் சேவை நிறுவனங்கள் உள்ளன.



இதுகுறித்து ஏடிஎம் பராமரிப்பு நிறுனங்கள் அமைப்பின் தலைவர் வி. பால சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘ரிசரவ் வங்கி அறிமுகம் செய்யும் புதிய 100 ரூபாய்களை ஏடிஎம்களில் வைக்க இயந்திரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய 2.40 லட்சம் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக ரூ.100 கோடி தேவைப்படும்.

அதேசமயம், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய்களையும் வைக்க வேண்டும், புதிய 100 ரூபாய்களையும் வைக்க வேண்டும் என்பதால், இது மிகப்பெரிய சவால்தான். ஏடிஎம் எந்திரத்தை மாற்றி அமைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று இப்போது கூற இயலாது’’ எனத் தெரிவித்தார்.

எப்ஐஎஸ் ஏடிஎம் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ராதா ராம துரை கூறுகையில், ‘‘பழைய 100 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்றாலும், புதிய ரூ.100 நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டாலும் அதில் பல்வேறு சமநிலையற்ற தன்மை இருக்கும். இந்த நிலையற்ற தன்மையை சீரமைக்க நீண்டநாட்களும் ஆகலாம்.

ஏற்கனவே இப்போதுதான் புதிய ரூ200 நோட்டுகளுக்காக பெரும்பாலான ஏடிஎம் களை சீரமைத்து இருக்கிறோம். அதற்குள் புதிய 100 ரூபாய்களை வைப்பதற்காக இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியது இருக்கும். அதற்காகக் கூடுதல் காலமும், முதலீடும் தேவைப்படும்’’ எனத் தெரிவித்தார்.

ஆதலால், ரிசர்வ் வங்கி புதிய ரூ.100 நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டாலும், அது ஏடிஎம் இந்திரங்களில் எந்த அளவுக்கு விரைவாக வைக்கப்படும் என்பது கேள்விக்குறியே

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...