Saturday, July 14, 2018

நாட்டின் 3-வது திருநங்கை நீதிபதி :அசாமில் இன்று பதவியேற்பு

Updated : ஜூலை 14, 2018 07:13 | Added : ஜூலை 14, 2018 07:09



கவுகாத்தி: மகாராஷ்டிரா,மே.வங்கத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் நாட்டின் மூன்றாவது நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் : என்னை நீதிபதியாக நியமனம் செய்திருப்பதுஎன்னுடைய சமுதாயத்திற்கு மிகவும் சாதகமான விசயமாகும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகுறித்த விழிப்புணர்வை உருவாக்க இது உதவும் என கூறினார். மூன்றாம் பாலினத்தவர்களின் திறன் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று உறுதி செய்ய போதுமான வாய்ப்பாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக பல தீர்க்கப்படாத வழக்குகள் உள்ளன. அவை விரைவில் தீர்க்கப்படும் என தான் நம்புவதாகவும்,ஒரு நீதிபதியாக இயற்கையான நீதிக்கான கொள்கையை நான் பராமரிக்க முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 20170-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

தமிழத்திலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்ய்ஸ்ரீ சர்மிளா என்பவர் கடந்த மாதம் 30-ம் தேதி இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீலாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...