ஓலா, ஊபருக்கு மாற்றாக, 'தமிழ்நாடு ஆட்டோ'
Added : ஜூலை 21, 2018 23:45
பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களான, ஓலா, ஊபர் உள்ளிட்ட கால் டாக்சி நிறுவனங்களுக்கு மாற்றாக, உள்நாட்டு ஒருங்கிணைப்புடன், தன்னார்வலர்களால், 'தமிழ்நாடு ஆட்டோ' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களான ஓலா, ஊபர் உட்பட, பல கால் டாக்சி நிறுவனங்கள் உள்ளன.
வாகன சட்டம் : இவற்றுக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தாலும், இந்த நிறுவனங்கள், மோட்டார் வாகன சட்டத்தை மீறுவதாகவும், வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் நோக்கில், உள்நாட்டு ஒருங்கிணைப்புடன், 'தமிழ்நாடு ஆட்டோ' என்ற இணையதளத்தை, தன்னார்வலர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்து, இணையதளத்தை உருவாக்கிய, சிவகாசியை சேர்ந்த மோகன்ராஜ் கூறியதாவது:

தற்போது இயங்கும் கால் டாக்சி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் ரத்துக்கட்டணம், அபராத கட்டணம், நெரிசல் கட்டணம் என, பலவித கட்டணங்கள் வசூலிக்கின்றன. அதே நேரம், அதிக சம்பளம் தருவதாக ஆசைகாட்டும் நிறுவனங்கள், வேலையில் சேர்ந்தபின், இலக்கை நிர்ணயித்து, டிரைவர்களை ஓய்வின்றி டாக்சி ஓட்ட வைக்கின்றன.
புகைப்படம் : இதனால், பலர் வாகனங்களை விற்றுள்ளனர்; தற்கொலை செய்தும் உள்ளனர். இதை தடுக்க, 'சாப்ட்வேர்' இன்ஜினியரான நான், 'டிஎன் ஆட்டோ' என்ற இணையதள சேவையை உருவாக்கி உள்ளேன். இதில், வாகன உரிமையாளர்களிடம் பேசி, அவர்களின் கட்டண விபரம் மற்றும் வாகன புகைப்படத்தையும் வெளியிடுகிறேன்.

இதற்காக, 100 ரூபாய் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கிறேன். வாடிக்கையாளர் அழைப்பை, நேரடியாக அவர்களிடம் அனுப்புகிறேன். இதற்காக, எந்த தொகையையும் நான் பிடிப்பதில்லை; வாடிக்கையாளர்களிடமும் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிப்பது இல்லை.இந்த இணையதளம், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இயங்கும். இதில், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே இடம் பெறும். வாகன உரிமையாளர் குறித்த விபரங்களும், டிரைவரின் தொடர்பு எண்களும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் தொலைபேசி எண்களும் இடம் பெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய இடங்கள், அதன் தனிச்சிறப்புக்களும் இடம் பெற்றிருக்கும்.மேலும் விபரங்களை, 99526 41127 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டும், tnauto.in@gmail.com என்ற, இ - மெயில் அல்லது www.tnauto.in என்ற, இணையதளம் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- - நமது நிருபர் -
- - நமது நிருபர் -
No comments:
Post a Comment