Sunday, July 22, 2018

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு

Added : ஜூலை 22, 2018 03:07 


புதுடில்லி: 'தனியார் நிறுவன போர்ட்டல்கள் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களிடம், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவிற்கும், கூடுதலாக, 12 ரூபாய் மற்றும் வரித் தொகை வசூலிக்கப்படும்' என, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு செல்லும் பயணியர், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் வெப்சைட்டை பயன்படுத்தி, 'ஆன்லைன்' முறையில், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.இது தவிர, ரயில் நிலையங்களில் இயங்கும் கவுன்டர்களுக்கு சென்று, 'ஆப்லைன்' முறையிலும், டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.'பேடிஎம், யாத்ரா, மேக்மை ட்ரிப்' போன்ற தனியார் நிறுவன போர்ட்டல்களை பயன்படுத்தியும், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 'தனியார் நிறுவனங்கள் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும், கூடுதலாக, 12 ரூபாய் மற்றும் வரி சேர்த்து வசூலிக்கப்படும்' என, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதை விட, கவுன்டர்களில் முன்பதிவு செய்தால், ரயில் டிக்கெட்டிற்கான செலவு குறையும் என, வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024