Sunday, July 15, 2018

நீட் தேர்வு: கூடுதல் மதிப்பெண் வழங்கும் உத்தரவை எதிர்த்து சென்னை மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

By DIN | Published on : 14th July 2018 10:00 PM 




புதுதில்லி: நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் மொழி பெயர்ப்பில் பிரச்னை இருந்ததாக கூறி சிபிஎம் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்தல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சத்ய தேவ் என்ற மாணவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவால் கலந்தாய்வு மூலம் சேர்ந்த தனக்கு பாதிப்பு வரக்கூடாது என மாணவர் சத்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓசி பிரிவை சேர்ந்த 2 மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்.

69 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என இடஒதுக்கீடு இல்லாத (ஓசி) பிரிவை சேர்ந்த மாணவர்கள் முத்துராமகிருஷ்ணன், சத்தியநாராயணன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024