Friday, July 27, 2018


எம்பிபிஎஸ் சேர்க்கை: பார்வையற்ற மாணவரின் மனு தள்ளுபடி


By DIN | Published on : 27th July 2018 01:03 AM |

 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டில் தமக்கு சேர்க்கை வழங்கக் கோரி பார்வையற்ற மாணவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.எஸ்.விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 10 -ஆம் வகுப்பில் 480 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 1,061 மதிப்பெண்களும் எடுத்துள்ளேன். நீட் தேர்வில் 117 மதிப்பெண் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்தேன். எனது மனுவைப் பரிசீலித்து சேர்க்கை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, எனக்கு உரிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் படிப்பில் சிறந்து விளங்குவார் என்பது அவர் பெற்ற மதிப்பெண்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவில் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சேர்க்கை வழங்க முடியாது. மனுதாரர் 75 சதவீத பார்வைக் குறைபாடு உடையவர் என்பதால் அவருக்கு சேர்க்கை வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரரின் நிலை குறித்து பரிதாபப்பட இயலுமே தவிர விதிகளை சட்ட விரோதமாக கருத முடியாது' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024