Tuesday, October 2, 2018


'சிம் கார்டு' வாங்க ஆதார் கேட்க தடை


புதுடில்லி : 'மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்க, ஆதார் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, ஆதார் பயன்பாட்டை நிறுத்த, 15 நாட்களுக்குள் செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



'அரசு சலுகைகளை பெறுவதற்கு மட்டுமே ஆதார் பயன்படுத்த வேண்டும்; மற்றபடி, தனியார் நிறுவன அங்கீகாரங்களுக்கு, ஆதார் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய சிம் கார்டுகள் வாங்க, ஆதார் அவசியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால், 'மொபைல் போன் சேவை நிறுவனங்கள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை வழங்கும் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களின் அடையாளத்தை அங்கீகரிக்க, ஆதார் எண் பயன்பாட்டுக்கு பதில், புதிய செயல் திட்டத்தை வகுத்து, அதை அக்., 15க்குள் தாக்கல் செய்யும்படி, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வாடிக்கையாளர் அங்கீகாரத்துக்கு, பழைய முறைப்படி, கையெழுத்துடன் கூடிய ஆவணங்களை பெற்று, சான்றுகளை சரி பார்த்த பின், இணைப்பை வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024