Saturday, October 13, 2018

நிறுத்த இடமில்லை விமானங்கள் தாமதம்

Added : அக் 12, 2018 22:44

சென்னை: சென்னை விமான நிலையத்தில், விமானங்களை நிறுத்த, இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வந்த விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், விமான போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. இதனால், சென்னையில் தரையிறங்கும் விமானங்களுக்கு, 'பே' எனப்படும், நிறுத்துமிடம் கிடைக்கவில்லை.இதனால், மும்பையில் இருந்து, 11:05க்கு, 142 பயணியருடன் சென்னை வந்த, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானமும், கோல்கட்டாவில் இருந்து, 11:15க்கு, 134 பயணியருடன், சென்னை வந்த, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானமும், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.டில்லி, மதுரை, புவனேஷ்வர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம், வானில் வட்டமடித்து, தாமதமாக தரையிறங்கின.பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள், நேற்று அதிகாலையில், சென்னை திரும்பி வந்தன. விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...