Friday, October 19, 2018

மொபைல் இணைப்பு துண்டிப்பா? ஆதார் ஆணையம் மறுப்பு

Added : அக் 18, 2018 19:52




புதுடில்லி: மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையெனில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் என செய்திகள் வெளியானதாக கூறப்பட்டது.இதனை தொலை தொடர்பு துறை மறுப்பும் தெரிவித்தது.

இது தொடர்பாக தொலைதொடர்பு துறை மற்றும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (ஆதார்) இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை: 50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பு ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தி தவறு. கற்பனையானது. வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியானது. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆதார் இகேஓய்சி(eKYC) மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடவில்லை.வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024