Monday, October 15, 2018

காலத்தை வென்றவர்... காவியமானவர்! இன்று கலாம் பிறந்த தினம்

Added : அக் 14, 2018 22:16 |



 இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது தமிழகத்தில்இளைஞர் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உடலால் மறைந்தாலும், இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார். 1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

துவக்கக் கல்வியை ராமேஸ்வரத்திலும், உயர்நிலை படிப்பை ராமநாதபுரத்திலும் முடித்தார். தமிழ் வழிக் கல்வியிலேயே படித்த இவர், திருச்சியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார். பின் எம்.ஐ.டி.,யில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

அணு விஞ்ஞானி:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ., ) விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார். இந்திய ராணுவத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்ததே அவரின் முதல் பணி. 1969ல் இஸ்ரோவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

போலார் எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி., 3 போன்ற ராக்கெட் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கினார். இஸ்ரோ, 1970ல் எஸ்.எல்.வி., ராக்கெட் மூலமாக 'ரோகிணி 1' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. செயற்கைக்கோள்களை ஏவிய கலாம், அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். 1992 ஜூலை- 1999 டிச., வரை டி.ஆர்.டி.ஓ.,வின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். அப்போதுதான், பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தி, இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றினார்.

மாணவ சமுதாயம்:

நாட்டின் 11வது ஜனாதிபதியாக 2002ல் பொறுப்பேற்றார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்து, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தார். ஜனாதிபதி பதவிக்காலத்துக்கு பின் எதிர்காக சந்ததியை உருவாக்கும் முயற்சியில் இறுதி மூச்சு வரை பாடுபட்டார்.

விருதுகள் :

பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன், கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மறைவுக்குப்பின் தேசிய நினைவிடம், பல அரசு நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன் வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024