Monday, October 15, 2018

தியாகராஜன் குமாரராஜா வரிகளில் `சீதக்காதி' சிங்கிள் டிராக்!

உ.சுதர்சன் காந்தி

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம், 'சீதக்காதி'. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.



ஆஸ்கர் வின்னர் அலெக்ஸ் நோபல் என்னும் மேக்கப் மேன்தான் விஜய் சேதுபதிக்கான தோற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதன் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. கோவிந்த் வஸந்தா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கலைக்கும் அக்கலையை நேசிக்கும் கலைஞனுக்கும் இடையேயான உறவைக் கூறும் இப்படம், நவம்பர் இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. இது விஜய் சேதுபதியின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024