மாவட்ட செய்திகள்
பார்பிகியூ கிரில்
இப்போது வித விதமான உணவு வகைகளை வீட்டிலேயே சமைப்பதில் இல்லத்தரசிகள் மிகுந்த முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளனர்.
பதிவு: அக்டோபர் 03, 2018 15:55 PM
ஓட்டலுக்குச் சென்று குடும்பத்தோடு சாப்பிடுவதில் வேலை மிச்சம் என்றாலும், வீட்டில் சமைப்பது போன்ற கை பக்குவமும், சுகாதாரமும் ஓட்டலில் நிச்சயம் கிடைப்பதில்லை. ஓட்டலில் கிடைக்கும் உணவு வகை களை வீட்டிலேயே சமைக்க தேவை யான அனைத்து கருவிகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. இது இல்லத்தரசிகளின் வேலையை ஓரளவு குறைத்துவிட்டது. அந்த வகையில் வந்துள்ளதுதான் பார்பி கியூ.
இறைச்சி போன்ற உணவு வகைகளை மசாலா தடவி அதை சுடுவதற்கு மிகவும் உபயோகமாக இருப்பதுதான் இந்த கிரில்கள். இது மின்சாரத்தில் இயங்குவதால் வேலை மிச்சம். இறைச்சியும் நீங்கள் எதிர்பார்க்கும் பக்குவத்துக்கு வெந்துவிடும்.
யூரோலைன் நிறுவனத்தின் பார்பிகியூ கருவி 2000 வாட் மின்சக்தியை வெப்ப சக்தியாக வெளிப்படுத்தக் கூடியது. இதனால் இறைச்சி மிக எளிதாக வெந்து சுவையானதாக இருக்கும்.
இதில் பவர் இன்டிகேட்டர் உள்ளது. இந்த கிரில்லை எளிதில் கழற்றி மாட்டலாம். இதனால் இதை சுத்தம் செய்வது எளிது. மூன்று விதமான வெப்ப நிலையை இதில் மாற்றி அமைக்க முடியும். தானியங்கி கண்ட்ரோல் வசதி உள்ளதால் நிர்ணயித்த வெப்ப நிலையை எட்டியவுடன் இது தானாக அணைந்துவிடும். வீட்டு உபயோகத்துக்கென தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. கிரில் சூடேறினாலும் இதன் கைப்பிடியைத் தூக்குவதற்கு வசதியாக உள்ளது. இதனால் கைப்பிடி சூடேறாது. இனி வார விடுமுறை நாட்கள் அல்லது விருந்தினர் வந்தால் அவர்களுக்கு சுவையான விருந்து படைக்க இந்த கிரில் உதவும். இறைச்சி மட்டுமன்றி சீஸ் ரோல், உருளைக் கிழங்கு ரோல் போன்றவற்றையும் தயாரித்து சாப்பிடலாம். இதன் ஆரம்ப விலை ரூ.3,499 ஆக இருந்தது. இப்போது அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ.2,199-க்கு கிடைக்கிறது.

No comments:
Post a Comment