Saturday, October 20, 2018

அமர்தசரஸ் சோகம்: ஒரேநேரத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே கடந்து சென்றால், கோரவிபத்து நிகழ்ந்ததா?- ரூ.5 லட்சம் நிவாரணம்

Published : 19 Oct 2018 21:56 IST

ஐஏஎன்எஸ்அமிர்தசரஸ்,




ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட காட்சி - படம்: ஏஎன்ஐ

அமிர்தசரஸில் நடந்த ரயில் விபத்தின் போது ஒரே நேரத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்ததால், மக்கள் தப்பிக்க முடியாமல் ரயிலில் அடிபட்டு இறந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் உள்ள ஜோதா பதக் எனும் இடத்தில் ராவணன் உருவபொம்மைதகன நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது.

இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்து ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.

அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வேகமாக வந்தது, பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது. மேலும் எதிர்த்திசையில் அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு ரயிலும் வந்ததால் மக்களால் தப்பித்து செல்ல முடியாமல் ரயிலில் அடிபட்டு இறந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த போது, அந்த இடத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருந்தனர். ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


மருத்துவமனையில் கூடியிருக்க மக்கள் கூட்டம்

இது குறித்து அமிர்தசரஸ் துணை ஆட்சியர் ராஜேஷ் சர்மா கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் 50 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை மேலும் உயருமா எனத் தெரியாது, காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்த விபத்து நடந்தது குறித்து அறிந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது இஸ்ரேல் பயணத்தை ரத்துசெய்து நாளைக் காலை அமிர்தசரஸ் நகருக்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தவிபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ட்விட்டரில் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் அளிக்கத் தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்

பஞ்சாப் முதல்வர் இரங்கல்

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் கூறுகையில், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், மருத்துவசிகிச்சையும் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.




பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அமிர்தசரஸ் விபத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் மனதை அதிரச் செய்யும் செய்தியாக இருக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.




காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பஞ்சாபில் நடந்த ரயில்விபத்தில் 50பேர் பலியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக காங்கிரஸ் தொண்டர்களும், மாநிலஅரசும் சென்று விரைந்து மீட்புப்பணியில் ஈடுபடக் கேட்டுக்கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கலையும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...