Tuesday, October 2, 2018

சபரிமலையில் பெண்களுக்கு வசதிகள்கேரள அரசு அறிவிப்பு 

dinamalar 2.10.2018

''சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பஸ்சில் இட ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்,'' என, கேரள தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.




ஆலோசனைக் கூட்டம்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், போர்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் அமைச்சர் கூறியதாவது: சபரிமலை வரும் பெண்களுக்காக, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு வசதிகள் செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்காக தனி வரிசை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. பெண்களுக்காக கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்படும். கோவில் திறந்திருக்கும் நேரம்,

நாட்களை அதிகரிப்பது குறித்து, தந்திரியுடன் பேசி முடிவு செய்யப்படும்.

இட ஒதுக்கீடு

பம்பையில் பெண்கள் குளிக்க வசதி செய்யப்படும். நிலக்கல் - பம்பை பஸ்களில், பெண்களுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024