வெங்காயம் விலை உயர்வு; 450 பிரியாணி கடைகள் மூடல்
Updated : டிச 05, 2019 02:04 | Added : டிச 05, 2019 02:02
வேலுார்: வெங்காயம் விலை உயர்வால், 450 பிரியாணி கடைகள் மூடப்பட்ட நிலையில், 2,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்கள், பிரியாணிக்கு புகழ் பெற்றவை. இங்குள்ள, 1,200க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில், 5,000 பேர் வேலை செய்கின்றனர். வெங்காயத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், தினமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயம், 150 ரூபாய்; சின்ன வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்றன.
பிரியாணி கடைகளில், மட்டன், சிக்கன் பிரியாணிக்கு, வெங்காய தயிர் பச்சடி வழங்கப்படும். விலை உயர்வால், 15 நாட்களாக, வெங்காய தயிர் பச்சடியை நிறுத்தி விட்டனர். பிரியாணி விலையும் உயர்ந்து விட்டது. இதனால் விற்பனை குறைந்து விட்டதாக, ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட பிரியாணி கடை உரிமையாளர் சங்க தலைவர் அப்துல்லா கூறியதாவது:
வரலாறு காணாத விலை உயர்வால், வெங்காயம் தயிர் பச்சடி நிறுத்தப்பட்ட நிலையில், மட்டன் பிரியாணி, கால் பிளேட், 140 ரூபாயில் இருந்து, 170 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், விற்பனை குறைந்து விட்டது. தினமும், 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது; 450 பிரியாணி கடைகள் மூடப்பட்டுள்ளன. பிரியாணி கடைகளில் வேலை செய்யும், 2,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment