Thursday, December 5, 2019

சர்க்கரை ரேஷன் கார்டுக்கு அரிசி வினியோகம் துவக்கம்

Added : டிச 04, 2019 23:38

சென்னை: ரேஷன் கடைகளில், அரிசி கார்டாக மாற்றப்பட்ட சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வினியோகம் துவங்கியது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி ரேஷன் கார்டுகளுக்கு, வீட்டில் நான்கு பேர் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள, ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் இலவசமாக வழங்கப்படுகிறது.சர்க்கரை கார்டுகளுக்கு, அரிசிக்கு பதில், 5 கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டாக மாற்றி கொள்ள, நவம்பரில், தமிழக அரசு அனுமதி வழங்கியது.அதன்படி, மொத்தம், 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களில், 4.50 லட்சம் பேர், அரிசி கார்டுகளுக்கு மாறினர். அவர்களுக்கு, நேற்று முதல், ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்பட்டது.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்க்கரை கார்டுதாரர்களில், அரிசிக்கு மாற விண்ணப்பித்த நபர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. 'அந்த கார்டுகளுக்கு, ரேஷனில், அரிசி வழங்குமாறு, கடை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதற்கு ஏற்ப, கடைகளுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024