துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்
Added : டிச 12, 2019 21:04
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, கடிதம் மூலம் கொலை மிரட்டல்விடுத்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன், முகவரி இல்லாமல் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:துணைவேந்தர் பணியில் சேர்ந்து, ஓராண்டு ஆகியும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு இதுவரை எந்த நல்லதையும் செய்யவில்லை. பொது இடங்களில் நல்லவர் போல காண்பித்து, திருட்டுத்தனமாக பல்வேறு விஷயங்களில் ஏமாற்றி வருகிறார்.துணைவேந்தர் என்பதை மறந்து, கீழ்தரமாகவும் நடந்து கொள்கிறார். தகுதி இருந்தும், ஓய்வு பெற்ற துணைவேந்தரின் நண்பர்கள் என்பதால், பலருக்கும் பதவி உயர்வு வழங்காமல் இருந்து வருகிறார். எங்களுக்கு தேவையான பணியிடங்களை விளம்பரப்படுத்தி, நேர்முக தேர்வுகள் நடத்தி, தகுதி அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். இரண்டு வாரங்களில் செய்வீர்கள் என, நம்புகிறோம். அப்படி இல்லை என்றால், கொலை செய்வதற்கு கூட தயங்க மாட்டோம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.துணைவேந்தர் புகார்படி, பல்கலைக்கழக போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment