Friday, December 13, 2019

நீட்' ஆள் மாறாட்ட நபர்களின் படம் மருத்துவ கல்லுாரிகளில் ஒட்ட உத்தரவு

Added : டிச 12, 2019 22:59

கோவை: 'நீட்' தேர்வு ஆள் மாறாட்டத்தில், தேர்வு எழுதிய நபர்களின் புகைப்படங்களை, மருத்துவ கல்லுாரி, 'நோட்டீஸ்' போர்ட்டில் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

20 லட்சம் ரூபாய்

தமிழகத்தில், 'நீட்' தேர்வின் போது ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஒரு மாணவி உட்பட ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பெற்றோர் மற்றும் புரோக்கர்களும் சிக்கினர்.விசாரணையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்கு பதிலாக தேர்வு எழுதிய நபர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு எழுதியவர்கள், பல்வேறு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் தான் என்பதும் தெரிந்தது. ஆனால், இவர்களின் முகவரி, போன் எண் போன்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களை கண்டறிவதில், குழப்பம் நீடித்து வருகிறது.

இதையடுத்து, ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் ஒட்ட, சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., விஜயகுமார், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தார். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆள் மாறாட்டத்துக்கு முதுநிலை மருத்துவம் மற்றும் இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உதவி செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோரிக்கை

இவர்கள் தேர்வு எழுதிய, 'ஹால் டிக்கெட்டில்' பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.அந்தப் பெயர் மற்றும் புகைப்படங்களை, நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லுாரி நோட்டீஸ் போர்டுகளில் ஒட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்மூலம், இதர மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அவர்களை அடையாளம் காண முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024