Sunday, December 15, 2019

பெரியகோவில் கும்பாபிஷேகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Added : டிச 14, 2019 22:12


தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ம் தேதி நடைபெறுகிறது என, மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த, 1980- ஏப்., 3ம் தேதியும், 1997 ஜூன், 9ம் தேதியும், தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 23 ஆண்டுக்கு பின், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.மூன்று மாதங்களுக்கு முன், அடுத்த ஆண்டு, பிப்., 5ம் தேதி, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.ஆனால், மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.கடந்த, 2ம் தேதி, பாலாலயம் நடைபெற்றது.

அப்போதும், அரண்மனை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிடவில்லை. சில நாட்களுக்கு முன், ஆய்வு மேற்கொண்ட, டி.ஐ.ஜி., லோகநாதன், 'கும்பாபிஷேகம் 5ம் தேதி நடைபெறும்' என, தெரிவித்தார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று முன்தினம், கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது, பிப்., 5ம் தேதி, காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகமும்; பூர்வாங்க பூஜை ஜன., 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கி, பிப்., 1ம் தேதி வரை நடைபெறும் என, கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024