ஜன., 7ல் ஷீரடிக்கு சிறப்பு ரயில்
Added : டிச 14, 2019 22:25
சென்னை: இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், மதுரையில் இருந்து, ஜனவரி, 7ம் தேதி, ஷீரடிக்கு, தனி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை, சென்ட்ரல் வழியாக செல்லும்.இப்பயணத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஷீரடி, பண்டரிபுரம், ஆந்திராவில், மந்த்ராலயம் சென்று வரலாம். ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 5,670 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு.மேலும் தகவலுக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., மையத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment