Friday, July 3, 2015

இரு பல் மருத்துவப் பட்டய படிப்புகளுக்கு அங்கீகாரம்

சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்தில் இயங்கும் மருத்துவம் சார்ந்த கல்வி குழுமத்தால் வழங்கப்படும் மருத்துவம் சார்ந்த பல் மருத்துவ படிப்புகளான "டென்டல் மெக்கானிக்', "டென்டல் ஹைஜீனிஸ்ட்' ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் மருத்துவம் சார்ந்த கல்வி குழுமத்தால் நடத்தப் பெறும் மருத்துவம் சார்ந்த பல் மருத்துவப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய தமிழ்நாடு மாநில பல் மருத்துவக் கல்வி கவுன்சிலுக்கு அறிவுறுத்தி இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முன் மாதிரி: இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர். எஸ்.கீதாலட்சுமி வெளியிட்ட அறிக்கை: மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பதிவு செய்யும் வழிமுறை, பயிற்சி வழங்கும் முறை, பாடத்திட்டம் வகுத்தல், தேர்வு முறை நடத்தும் விதம், தேர்வு முடிவுகள் வெளியிடும் விதம் போன்ற நடவடிக்கைகள் தமிழக அரசால் திறம்பட நடத்தப்படுகின்றன.
தமிழக அரசை முன் மாதிரியாகக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளான டென்டல் மெக்கானிக், டென்டல் ஹைஜீனிஸ்ட் போன்ற படிப்புகளை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய பல் மருத்துவக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024