புதுடில்லி : மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும், எம்.என்.பி., எனப்படும், 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' வசதி, இன்று முதல், நாடு முழுவதும் அமலாகிறது.இந்த வசதியை, பொதுத்துறை மற்றும் தனியார் என, அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும், மே 3க்குள் வழங்க வேண்டும் என, மத்திய அரசு கெடு விதித்திருந்தது. அந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என, அந்த நிறுவனங்கள் கோரியதை அடுத்து,ஜூலை 3 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை மாநில அளவில் செயல்பாட்டிலிருந்த இவ்வசதி, இனி நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதால், விருப்பமான நிறுவனத்திற்கு மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம். இந்த புதிய வசதி மூலம், கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள், புதிய சிம்கார்டு வாங்க அவசியம் இல்லை.
No comments:
Post a Comment