ஆர்.கே நகரில் இதுவரை வென்றவர்கள்!
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, இறந்து விட்டதால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. 2017, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி 1977–ல் உருவானது. 1977- 2011 வரை ஆர்.கே. நகர் தொகுதியில் 9 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், அ.தி.மு.க 5 முறையும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலா இரண்டுமுறையும் வென்றுள்ளன. ஆர்.கே.நகர் இப்போது சந்திக்கவுள்ளது 10-வது சட்டமன்றத் தேர்தல் ஆகும்
1977 - நடிகர் ஐசரி வேலன் (அ.தி.மு.க.), 1980 - வி.ராஜசேகரன், (இ.காங்கிரஸ்) , 1984 - வேணுகோபால் (காங்கிரஸ்),1989 - எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) ,1991 - மதுசூதனன் (அ.தி.மு.க.), 1996 - எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) ,2001 - சேகர்பாபு (அ.தி.மு.க.), 2006 - சேகர்பாபு (அ.தி.மு.க.) , 2011 - வெற்றிவேல் (அ.தி.மு.க.) 2016 - ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக பார்த்துள்ளது இந்தத் தொகுதி.
2011- ம் ஆண்டில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல், முதல்வரான ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட வழிவிட்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் 40 ஆண்டு காலத்தில் முதல் இடைத் தேர்தலை சந்தித்த இந்தத் தொகுதி இப்போது இரண்டாவது இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளது .
No comments:
Post a Comment