Saturday, April 22, 2017

துணைவேந்தர்களுக்கு மீண்டும் 'செக்' : இஷ்டத்துக்கு நியமனம் செய்ய தடை
பதிவு செய்த நாள்22ஏப்
2017
01:10

மதுரை: 'துணைவேந்தர் பணிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்கு முன்பல்கலையில் எவ்வித பணி நியமனங்களும் மேற்கொள்ளக்கூடாது' என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 24 அரசு பல்கலைகள், 2500க்கு மேற்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. 'இவற்றில் 2017 ஏப்.,௧௨ க்கு பின் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மறுஉத்தரவு வரும் வரை நிரப்பக்கூடாது' என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார்.இதன் பின்னணியில், 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 1,031ஆசிரியர், 4,722 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவற்றில் முறையே 545 மற்றும் 2,643 பணியிடங்களை தமிழகத்தில் உள்ள பல்கலை, அரசு, உதவி பெறும் கல்லுாரிகள், பாலிடெக்னிக்கு களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடியும் வரை புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதனால், பெரும்பாலான துணைவேந்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து மீள்வதற்குள், 'துணைவேந்தர் பதவி காலம் முடியும் நிலையில், கடைசி மூன்று மாதங்களில் பணிநியமனம் செய்யக்கூடாது' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பல்கலைகளில் பணி நியமனங்களில் பல லட்சம் ரூபாய் பேரம் நடக்கிறது. இதன் பின்னணியில் பெரும்பாலும் துணைவேந்தர்கள் உள்ளனர். இஷ்டத்திற்கும் பணி நியமனம் நடந்ததால்தான், அண்ணாமலை பல்கலை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான உபரி பணியிடங்களை மற்றும் நடவடிக்கையால், அரசு கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரு பல்கலையில் எத்தனை பணியிடங்களை நிரப்பலாம் என்பதை பொறுத்தே, துணைவேந்தர் பதவிக்கு மறைமுகமாக விலை நிர்ணயிக்கப்படுகிறது.'கேட்டதை' கொடுத்து துணைவேந்தர் பதவியை பிடித்து ஒன்றுக்கு இரண்டு மடங்காக 'கல்லா' கட்டிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால்தான் உயர்கல்வி தரம் கேள்விக்குறியாகி வருகிறது.மேலும், 'துணைவேந்தர் பதவிக்காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களில் தான் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன' என்ற தகவலும் உள்ளது.இதனால்தான் இதுபோன்ற தடைகள் அடுத்தடுத்து விதிக்கப்படுகிறது. உயர்கல்வியில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், துறை செயலர் சுனில்பாலிவலின் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; இதுதொடர வேண்டும்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...