Tuesday, August 22, 2017

ஆங்கிலம் அறிவோமே 173: எதுவுமே சொல்லவில்லையா?
Published : 15 Aug 2017 11:48 IST




கேட்டாரே ஒரு கேள்வி

மல்லாக்கப் படுத்துக் கொள்வது என்பதை எப்படிக் குறிப்பிடுவது?


********************

“‘As a senior citizen he is allowed to audit University classes’என்று படித்தேன். அர்த்தம் பொருத்தமாக இல்லையே!”

Audit என்பதற்கான வழக்கமான பொருள் தெரியும். ஒரு வியாபாரம் அல்லது தொழிலின் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதை audit என்பதுண்டு.

அதேநேரம் ஆர்வத்தில் ஒரு வகுப்புக்கு நீங்கள் சென்றால் (தேர்வு எழுதுவதோ சான்றிதழ் பெறுவதோ உங்கள் நோக்கமல்ல) அதை audit என்பதுண்டு. அந்தப் பொருளில்தான் வாசகர் சந்தேகம் எழுப்பியுள்ள வாக்கியத்தில் audit என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் கணக்கு வழக்குகள் வாய்வழியாகக் கூறப்பட, அவற்றைச் சரி பார்த்தார்கள். லத்தீன் மொழியில் audire என்பதற்குப் பொருள் ‘கேட்பது’. இதிலிருந்து வந்த சொல் audit என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

மற்றபடி audio என்பது கேட்பது தொடர்பானது என்று கூறி audio-visual, audible, audience என்பதை நான் உதாரணங்களாக்கினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்தான்.

********************

Gents என்பதன் ஒருமை என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Gent என்று ஒரு வார்த்தை இருக்காது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். என்றாலும் gent என்பதுதான் அதன் ஒருமைச் சொல். இன்று gent என்று ஒருவரைக் குறிப்பிட்டால் அது ஏதோ நகைச்சுவையாகச் சொல்வதுபோல ஆகி வருகிறது. மற்றபடி gentlemen என்பதன் சுருக்கம்தான் gents.

********************

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில். மல்லாந்து அல்லது மல்லாக்கப் படுத்துக்கொள்வது என்பதை face up எனலாம். Supine என்கிற இன்னொரு வார்த்தையும் உண்டு. After her knee surgery, she could only lay supine.

********************

“I didn’t say nothing” என்று ஒரு வாக்கியத்தைப் படித்தேன். குழப்பமாக இருக்கிறதே! இப்படி ஆதங்கப்பட்டிருக்கிறார் ஒரு வாசக நண்பர்.

சில மொழிகளில் இரண்டு எதிர்மறை வார்த்தைகள் இடம்பெற்றால் அவை ஒன்றுக்கொன்று ஆதரவாகவும், அடிக்கோடிடுவதாகவும் இருக்கும்.

ஆனால், ஆங்கிலத்தில் இரண்டு எதிர்மறைச் சொற்கள் பயன்படுத்தப் பட்டால் அவை ஒன்றையொன்று ரத்து செய்து விடும்.

அதாவது I didn’t say nothing என்பதில் not, nothing ஆகிய இரண்டு எதிர்மறைச் சொற்கள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றையொன்று நீக்கிவிடும். அப்படியானால் அந்த வாக்கியத்துக்குப் பொருள் I did say something என்பதுதான். எனவே I didn’t say nothing என்பதற்கான அர்த்தம் நான் நிச்சயம் எதையோ கூறினேன் என்பதுதான்.

Its importance cannot be underestimated. I should not be surprised if it didn’t rain.

ஆனால், சில நேரம் எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவது குழப்பம் அளிக்கக் கூடும்.

Every member of the team was not present என்று ஒருவர் கூறினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு உறுப்பினர்கூட வரவில்லை என்று எடுத்துக்கொள்வதா அல்லது சில உறுப்பினர்கள் வரவில்லை என்று எடுத்துக்கொள்வதா? இந்த இடத்தில் வாக்கியத்தைச் சற்று மாற்றியமைத்தால் குழப்பம் தீர்ந்துவிடும்.

No member of the team was present என்றால் யாருமே வரவில்லை என்றாகிறது.

Not every member of the team was present என்றால் உறுப்பினர்களில் சிலர் வரவில்லை என்றாகிறது.

(Some members of the team were not present என்று குறிப்பிடலாமே என்கிறீர்களா? குறிப்பிடலாம்.)

********************

Myself, himself, itself போன்றவற்றை ‘Emphatic reflexive pronouns’ என்பார்கள். அதாவது ஒரு செயலை ஒருவருக்குப் பதிலாக மற்றொருவர் செய்வதை அழுத்தமாகக் கூறுவது.

Please do not clean the room. I will do it myself.

ஆனால் இந்தியர்கள் ஆங்கிலத்தை பேசும்போது இது தேவையில்லாத பல இடங்களில் (பார்க்க கார்ட்டூன்) பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை இந்திய மொழிகளில் உள்ள சொற்களில் இந்த அழுத்தம் இருப்பதால் அதை ஆங்கிலத்தில் கொண்டு வருகிறோமோ என்னவோ. தமிழில் இன்றே என்பதும், ஹிந்தியில் ‘ஆஜ் ஹீ’ என்பதும் இரண்டு எடுத்துக்காட்டுகள்.

********************

When will the next contest in your column reoccur? என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். அவரது ஆர்வத்துக்கு நன்றி. ஆனால், அவர் கூறுவதைப் பார்த்தால் ஏற்கெனவே நான் இந்தப் பகுதியில் முன்வைத்த ஒரு போட்டியை மீண்டும் அளிக்க வேண்டும் என்ற அர்த்தமாகிறது.

தவிர reoccur என்ற சொல்லை நாம் பயன்படுத்துவதில்லை. Recur என்பதே சரி. (வாசகரின் விருப்பம் விரைவில் நிறைவேற்றப்படும்.).

********************


போட்டியில் கேட்டுவிட்டால்?

I ________ for you since 8 a.m.

a) Waited

b) Waiting

c) Am waiting

d) Have been waiting

e) Was waiting

Since என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்போது குறிப்பிட்ட நிகழ்வு இன்னும் தொடர்கிறது என்று அர்த்தம்.

எனவே waited, was waiting ஆகிய விடைகள் பொருந்தவில்லை.

I waiting என்பது சரியான பயன்பாடு அல்ல. I am waiting என்பது இலக்கணப்படி சரி. ஆனால், அந்த முழு வாக்கியத்தில் அது சரியாகப் பொருந்தவில்லை.

எப்போதோ தொடங்கிய ஒரு விஷயம் (இங்கே ‘காத்திருத்தல்’) இன்னமும் தொடர்கிறது என்றால் have been waiting என்பதுதான் பொருத்தமாக இருக்கிறது.

I have been waiting for you since 8 a.m.

Polymath என்றால் genius என்று அர்த்தமா?

ஒரு விதத்தில் அப்படித்தான். பலவற்றிலும் ஞானம் உள்ளவர். என்றாலும் இப்போதெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை. All round என்பது புழக்கத்தில் வந்துவிட்டது.

Xerox என்பது நிறுவனத்தின் பெயர் என்பதால் photostat என்பதுதான் நகல் எடுப்பதன் சரியான வார்த்தையா?

Photostat என்பதும் நிறுவனத்தின் பெயர்தான். Photocopy என்பதே சரியானது.

ஆண் சிங்கத்துக்குப் பிடரி என்கிறோமே. பிடரி என்பதை ஆங்கிலத்தில்

எப்படிக் கூறலாம்?

Mane

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...