Wednesday, August 23, 2017

சசிகலாவுக்கு வசதி கிடைத்தது எப்படி? : உதவியவர் பெயரை வெளியிட்டார் ரூபா

பதிவு செய்த நாள்22ஆக
2017
21:57


புதுடில்லி: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடைப்பதற்கு உதவியவரின் பெயரை, கர்நாடகாவின் முன்னாள் சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்டார்.

தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனைபெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். 'சிறைத் துறை அதிகாரிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறையில் சசிகலா,சொகுசு வசதிகளை பெற்றுள்ளார்' என, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியிருந்தார்.

அறிக்கை : இது தொடர்பாக, சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு, ஆதாரங்களுடன் அவர் அறிக்கை அனுப்பியிருந்தார். இதற்கிடையே, அவர் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். சிறையில் நடந்துள்ள முறைகேடு குறித்து, கர்நாடக ஊழல் தடுப்பு அமைப்பு விசாரிக்கிறது. இந்த அமைப்பின் விசாரணையின் போது, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன், தன் அறிக்கையை, ரூபா அளித்துள்ளார்.அந்த அறிக்கையில், புதிய தகவல்களை அவர் வெளியிட்டு உள்ளார்.

அதன் விபரம்: வி.எஸ்.பிரகாஷ் எனப்படும், ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவரை, சிறையில் இருந்த போது, சசிகலா சந்தித்துள்ளார். பிரகாஷ் மூலம், மல்லிகார்ஜுனா என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.இவர்கள் இணைந்து தான், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதி களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தீவிர விசாரணை : இது தொடர்பான ஆதாரங்களை அளித்துள்ளேன். தீவிர விசாரணை நடத்தினால், மேலும்பல உண்மைகள் தெரிய வரும்.சசிகலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு அருகிலுள்ள, அறைகளையும் சேர்த்து, நீண்ட வராண்டாவில் தடுப்பு போடப்பட்டிருந்தது; இந்த ஐந்து அறைகளையும், சசிகலா பயன்படுத்தி உள்ளார்.

சிறை விதிகளை மீறி, பல பார்வையாளர்களை அவர் சந்தித்துள்ளார். நீண்ட நேரம் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. லஞ்சம் கொடுத்து, பல சலுகைகளை சசிகலா அனுபவித்து உள்ளார்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறையில், பையுடன் சசிகலாவும், இளவரசியும் உலா வரும், 'வீடியோ' காட்சி கள் நேற்று முன்தினம் வெளியாகின.

இதையடுத்து, அன்று இரவே, சிறையின் தலைமை கண்காணிப்பாளர், நிக்காம் பிரகாஷ்அம்ரித், அதிரடியாக,கர்நாடக ரிசர்வ் போலீஸ் பட்டாலியனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர், சசிகலாவுக்கு உதவியதால், மாற்றப் பட்டாரா, என, எதிர்க் கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவின் சிறை முறைகேடு குற்றச்சாட்டுக்கு பின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளரை, 40 நாட்களில், ஆறு முறை மாற்றியுள்ளது, பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக,கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...