Tuesday, August 22, 2017

துணை முதல்வராக ஓ.பி.எஸ்.,பதவியேற்பு; பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 17:03




துணை முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றார்

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைந்ததை அடுத்து துணை முதல்வராக ஓ.பி.எஸ்., இன்று(ஆக.,21) பதவியேற்றார்.

கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் வித்யா சாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் கா.பாண்டியராஜன் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., நிதி மற்றும் வீட்டு வசதி துறையை கவனிப்பார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து ;

ஓ.பி.எஸ். துணை முதல்வராக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது : புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் ! தமிழகம் இன்னும் புதிய உயர்வை தொடும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...