தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
By DIN | Published on : 21st August 2017 05:30 AM |
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மழை அளவு : ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 60 மி.மீ., சின்னக்கல்லாறில் 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், ஜி பஜார் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 30 மி.மீ. மழை பதிவானது. தஞ்சை மாவட்டம் பாபநாசம், தென்காசி, கடலூர், செங்கோட்டை, போச்சம்பள்ளி, சீர்காழி, அரக்கோணம், செங்குன்றம், மயிலம், திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

No comments:
Post a Comment